Skip to main content

Posts

Showing posts with the label australian

National Close the Gap Day 2022 - இடைவெளி குறைத்து சமத்துவம் படைப்போம்

  இடைவெளி  குறைத்து சமத்துவம்  படைப்போம்  நீங்க முன்தெரியாத ஒருத்தரை பார்த்து பழக நினைச்சா, அவங்க பெயர், ஊர், எப்படி இங்க வந்தாங்க, அவங்களின் விருப்பு/வெறுப்புகள் என்னென்னன்னு கேட்பீங்கதானே? இப்படி தொடர் உரையாடல்கள் வழியேதான், அவங்களைப்  பத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும். ஒருவரின் வரலாற்றைப் புரிந்துகொள்ளும்போது, அவங்களுக்கும் நமக்குமான இடைவெளி குறையும். இடைவெளி குறையுநதால், நாம் அவங்களை நமக்கு சரிசமமாக நினைப்போம்/நடத்துவோம். பிறகு, இணைந்து ஒன்றாக பயணிக்கலாம். நம்ம ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்த போதிலும், அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பட்டறைகள் மூலம், அவர்களின் வரலாறு, வளர்ப்புமுறை, வாழ்வியல், அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்; இவையெல்லாம் அவர்களின் இன்றைய வாழ்வியலை எவ்வாறு பாதிக்கிறது என்று அவர்கள் நேரடியாக சொல்லக் கேட்டேன். தற்போதைய பழங்குடி மக்கள் இன்றும் பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளனர். புகை, மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமைப்பட்டு, உடல்நலன் மற்றும் மனநலன் குன்றி சமூகத்தின் விளிம்பு நிலையிலே வாழ்ந்து மட...

Dishwasher #டிஷ்வாஷர்

  ஆஸ்திரேலிய நகரங்களில் உள்ள  பெரும்பாலான வீடுகளில், சமைத்த/சாப்பிட்ட பாத்திரங்களை கழுவும் இயந்திரமான டிஷ்வாஷர்(Dishwasher) இருக்கும். ஆனா, நம்ம ஆளுங்க யாரும் அதை உபயோகப்படுத்த மாட்டாங்க. ‘என்ன ரெண்டு, மூணு பாத்திரம்தான, அப்பப்ப கழுவிக்குவேன்’ என்று சிலரும்,  ‘டிஷ்வாஷர் சரியா பாத்திரத்தை சுத்தம் செய்ய மாட்டேங்குது’ என்று இன்னும் சிலரும், ‘தோ இருக்காரு பாருங்க, இவர்தான் எங்க வீட்டு டிஷ்வாஷர்’ என்று பலரும் புருஷனை கைகாட்டுவார்கள். நாங்க வாடகைக்கு இருந்த வீட்டில் டிஷ்வாஷர் ஒரு தடவை யூஸ் பண்ண ஆரம்பிச்சு,  நேரத்தையும், தண்ணீரையும் மிச்சப் படுத்துவது பிடிச்சு போய், யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம், ‘டிஷ்வாஷர் இல்லா வீட்டில் குடியேற வேண்டாம்!’ என்றும் தீர்மானித்தோம்.  இரவு நேரத்தில் எல்லா பாத்திரங்களையும் அடுக்கி வைத்து,  டிஷ்வாஷிங் மாத்திரை (dishwashing tablet) ஒன்றை போட்டு, ஆன் செய்தால், ஒண்ணரை மணி நேரத்துல சுத்தம் பண்ணி, காலங்காத்தால நமக்கு எல்லா பாத்திரமும் பளிச்சென்று இருக்கும். நல்ல டிஷ்வாஷிங் மாத்திரை இருந்தால் (CostCo-வில் கிடைக்கும் Cascade Complete Dishw...

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் ...

ஒரு Deadly Story சொல்லட்டுமா

ஆஸ்திரேலிய அபாரிஜினல்ஸ்தான் (Australian Aboriginals - பழங்குடி மக்கள்) ஆஸ்திரேலிய நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள். அபாரிஜினல் பலர், போதைப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டு இருப்பதை கவனிச்ச ஆஸ்திரேலிய அரசு, போதை எவ்வளவு ஆபத்தானதுன்னு சொல்ல ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிச்சது. பழங்குடி மக்கள் அதிகமா வாழ்கிற பகுதிகளில், பெரிய பெரிய விளம்பர பலகைகள் வைத்து அவர்களுக்கு புத்தி சொல்ற மாதிரி “DRUGS ARE DEADLY” என்று வாசகங்களை CAPITAL LETTERS-ல் எழுதி, லைட் எல்லாம் போட்டு வைத்தனர். ஆஸ்திரேலிய அரசின் பொறுப்பான இந்தச் செயலை மகிழ்ந்து பாராட்டாமல், இதைப் பார்த்து மிகுந்த எரிச்சலானார்கள், பழங்குடி இனத்தவரின் மூத்த குடிமக்கள். இல்லியா, பின்ன? பழங்குடியின் இளையோர் “deadly” என்ற ஆங்கில வார்த்தையை “excellent”, “cool”, “super” என்ற அர்த்தத்தில் உபயோகிப்பார்கள். உதாரணத்துக்கு சில: “you look deadly, man”, “that’s a deadly idea”. நாம “மரண மாஸ்”, “கொன்னுட்ட போ!” என்று சொல்லுவோமில்ல, அந்த மாதிரி. உள்ளூர் பழங்குடியின சமூகத்துடன் எந்த முன்ஆலோசனையும் செய்யாமல் “Drugs are super cool” என்ற எத...

QTM குயீன்ஸ்லாந்தின் முத்தமிழ் விழா

  குயீ ஸ்லாந்தின் முத்தமிழ் விழா நன்றி! ‘நீங்க தான் நல்லா எழுதுவீங்கல்ல? இன்றைய நிகழ்ச்சி பற்றி சின்னதா முகநூலில் எழுதி போடுங்களேன்’ என்று நம்பிக் கேட்டுக் கொண்ட திருமதி. டாக்டர் வாசுகி Vasugi Nadarajah Sithirasenan அவர்கள். இதோ எழுதிட்டேன். என்ன, எழுதி, வெளியிட, கொஞ்சம் தாமதமாயிடுச்சு (after all, just 496 days!). மன்னிக்க! கொஞ்ச நாளைக்கு முன்னாடி காலங்காத்தால ஒரு சந்தேகம். இசைத்தமிழ், நாடகத்தமிழ் தெரியும்: ஆனா இயல் தமிழ்-னா என்னன்னு. அப்புறம் நமக்கெதுக்கு அதெல்லாம் என்று காலைச் சிற்றுண்டி சாப்பிடப் போய் மறந்து போனேன். நல்ல வேலையாக, முத்தமிழ் பற்றியும் தெரியாதவர்களுக்காக இயல் (இயல்பாக நாம் பேச, எழுத பயன்படும் தமிழ்), இசை (பாடுவதற்கு ஏற்ற/ பாடும் தமிழ்) மற்றும் நாடக (இது டிராமா தமிழ் அல்ல… ஆடல் கலையை வளர்க்கும் கூத்து/நடனத்துக்ககான தமிழ்) தமிழ் மொழிகளை விளக்கிச் சொல்லி குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் (Queensland Tamil Mandram) முத்தமிழ் மாநாட்டை தொடங்கி வைத்தார்கள். நன்றிகள்! பொதுவாக இந்த மாதிரி இலக்கிய விழாக்கள் தொடங்கும்போது, வாத்திய கோஷ்டி ஒன்று வந்து மங்கள இசை பாடி, தாலாட்டி...

Moustache + November = மொவம்பர்

நவம்பர் மாதம் வந்தவுடன், பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் கிடா மீசை வைப்பது வழக்கம். இந்த வருடம் வைக்கலாமா-வேணாமா-வேணாமா-வைக்கலாமா என்று இங்கி-பிங்கி போட்டு பார்த்து வைத்தாகிட்டது (யார்றா அது, அதுக்குள்ள, போட்டோ கேக்கறது? பார்க்க !).  இந்த கிடா மீசையை விட, பயமுறுத்த இன்னும் பயங்கரமான புள்ளி விவரங்கள் உள்ளன.   15–44 வயதுள்ள ஆஸ்திரேலிய ஆண்களின்  (தடுக்க முடிகிற) இறப்புகளுக்கான முதன்மை காரணம் - தற்கொலை. ஆஸ்திரேலியாவில் சராசரியாக, ஒவ்வொரு நாளும் சுமார் 6 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். என்ன காரணம் என்று தெரிய வேண்டுமெனில், ManUp! என்ற டாக்குமென்டரி யை பாருங்கள்.  2003-ஆம் ஆண்டில், மெல்பர்னில், வழக்கமா பீர் அருந்திக்  கொண்டிருந்த இரு தோழர்கள் (Bros), ‘இப்பல்லாம் ஆண்கள் மீசை (Mo - moustache) வளர்ப்பதே இல்லை’  என்று அவர்களுக்குள் கேட்க ஆரம்பித்து, திரும்பவும் முறுக்கு மீசையை ஃபேஷன் ட்ரெண்டாக மாற்ற, ‘மாத்துவோம்-எல்லாத்தையும்-மாத்துவோம்’-னு செய்த முயற்சிதான் மொவம்பர்.  அவர்களுக்குத் தெரிந்தவரின் அம்மா ஒருவர்,  பெண்களின் மார்பக புற்று நோய்...