Skip to main content

Posts

Moustache + November = மொவம்பர்

நவம்பர் மாதம் வந்தவுடன், பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் கிடா மீசை வைப்பது வழக்கம். இந்த வருடம் வைக்கலாமா-வேணாமா-வேணாமா-வைக்கலாமா என்று இங்கி-பிங்கி போட்டு பார்த்து வைத்தாகிட்டது (யார்றா அது, அதுக்குள்ள, போட்டோ கேக்கறது? பார்க்க !).  இந்த கிடா மீசையை விட, பயமுறுத்த இன்னும் பயங்கரமான புள்ளி விவரங்கள் உள்ளன.   15–44 வயதுள்ள ஆஸ்திரேலிய ஆண்களின்  (தடுக்க முடிகிற) இறப்புகளுக்கான முதன்மை காரணம் - தற்கொலை. ஆஸ்திரேலியாவில் சராசரியாக, ஒவ்வொரு நாளும் சுமார் 6 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். என்ன காரணம் என்று தெரிய வேண்டுமெனில், ManUp! என்ற டாக்குமென்டரி யை பாருங்கள்.  2003-ஆம் ஆண்டில், மெல்பர்னில், வழக்கமா பீர் அருந்திக்  கொண்டிருந்த இரு தோழர்கள் (Bros), ‘இப்பல்லாம் ஆண்கள் மீசை (Mo - moustache) வளர்ப்பதே இல்லை’  என்று அவர்களுக்குள் கேட்க ஆரம்பித்து, திரும்பவும் முறுக்கு மீசையை ஃபேஷன் ட்ரெண்டாக மாற்ற, ‘மாத்துவோம்-எல்லாத்தையும்-மாத்துவோம்’-னு செய்த முயற்சிதான் மொவம்பர்.  அவர்களுக்குத் தெரிந்தவரின் அம்மா ஒருவர்,  பெண்களின் மார்பக புற்று நோய்க்கு நிதி திரட்டியதை இன்ஸ்பிரஷனாகக்  கொண்டு,
Recent posts

Art of Gardening - எங்க வீட்டுத் தோட்டம்

  TLDR; Gardening is a hobby that offers a holistic, therapeutic, joyful and rewarding experience. If you would like to experience magic, plant a seed, nurture it and see the first flower/fruit get produced.  சுருக்கம்: தோட்டக்கலை என்பது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான அனுபவத்தை வழங்கும் ஒரு பொழுதுபோக்கு. நீங்கள் ஒரு அதிசயத்தைக் காண விரும்பினால், ஒரு விதை யை நட்டு, பராமரித்து, அது செடியாக வளர்ந்து  மலர் / பழம் / விளைபொருளாய் உருவாவதைக் காணுங்கள். ஆஸ்திரேலியா வந்த புதுசுல இங்கே உள்ள வீட்டுத் தோட்டங்களையெல்லாம் பார்ப்பேன். அழகான பூக்களோ, பறிச்சு சாப்பிட ஒரு பழம், காயோ இல்லாம இருக்கிற செடி, கொடிகளைக் காட்டி,  'பாத்தீங்களா, எங்க தோட்டம் எவ்வளவு அழகா இருக்கு'ன்னு சொல்லுவாங்க, உள்ளூர் ஆஸ்திரேலியர்கள். 'ஏம்மா, இதெல்லாம் ஒரு தோட்டமமா'ன்னு  சிரிப்பு வரும். இந்த செடி கொடிகளுக்கா மாங்கு, மாங்கென்று வார இறுதி நாட்களில் உழைக்கிறார்கள் என்று தோணும். கொஞ்ச மாதங்களுக்கு முன்னால  ஒரு மரப்பண்ணைக்கு (plant nursery) போயிருந்தோம். அங்குதான், இங்கே வளர்கிற, இந்த மண்ணுக்கே உரிய  உள்ந

Queensland Elections 2020 குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் போட்டியிடும் தமிழர்

  முன்குறிப்பு: இதை என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நான் சார்ந்திருக்கும் நிறுவனங்களின் கருத்து அல்ல. ‘உலகத் தேர்தல்களில் முதன்முறையாக, அமெரிக்க தேர்தலில் ஒரு தமிழர் போட்டி', 'இங்கிலாந்து தேர்தலில் வென்ற தமிழர்' என்று செய்திகள் பார்க்கும்போதெல்லாம் ‘பரவாயில்லையே, தமிழ் நாட்டிலேர்ந்து நம்ம ஆளு ஒருத்தர் போய்,  அந்த நாட்டுல போட்டி போடறாங்களேன்னு ஒரு நிமிடம் பெருமையா இருக்கும். ஆனா, பக்கத்திலே வெள்ளைக்கார போட்டோவைப் போட்டு 'இவருதான், அவரு'னு இருக்க படத்தை பார்த்தால் 'அடச்சை, இவரயா நினைச்சு பெருமைப்பட்டோம்' என்றாகிவிடும்.  இப்ப ட்ரெண்டிங்-கில் இருக்கும் அமெரிக்க சித்தி கமலா ஹாரிஸ் மிகச்சிறந்த உதாரணம். ம்ம்ம்ம்..இல்லாத ஊருக்கு, இலுப்பை பூ தான் சர்க்கரை.  அக்டோபர் மாதம் 31ம் தேதி நடக்க இருக்கும் குயின்ஸ்லாந்து மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் திரு. பழனிச்சாமி (@PalaniForMaiwar) அவர்கள் தமிழ் நாட்டில், மதுரைக்கு அருகிலுள்ள அருகிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து, பின் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர். தற்போது ஆட்சியில் இருக்கும் தொழிலாளர் (லேபர்)

Anniversary Surprises

ஆனிவர்ஸரிகளும் யூடியூப் அலப்பறைகளும் பர்த்டே ஸர்ப்ரைஸ், ஆனிவர்ஸரி ஸர்ப்ரைஸ், ஷாப்பிங் ஹால் (Hall இல்ல Haul!) என்று ஏகப்பட்ட யூடியூப் அலப்பறைகள் (யூடியூப் அலப்பறைகள்- copyrighted). அன்னைக்கு ஸ்பெஷல் டே என்று ஏற்கனவே தெரியும்; எதிர்பார்ப்பும் இருக்கும்; அப்புறம் என்ன  ஸர்ப்ரைஸ்?!! பத்தாவது திருமண நாள் வருகிறதே என்று செம ஸர்பிரைஸாக ஒரு ரூம் ஹீட்டர் (ஒரு வாரமா பழைய ஹீட்டர் வேலை செய்யல!) வாங்கிக் கொடுத்தேன். இன்னும் வீட்டு உபயோக பொருட்கள் என்ன என்ன தேவையோ, அதையெல்லாம் வாங்கிக்  கொடுத்து, தினமொரு ஸர்ப்ரைஸ் செய்யலாம் என்று தொடர இருக்கிறேன். எங்களை வாழ்த்தலாமே, பிரெண்ட்ஸ்!! #வாழ்கவளமுடன் #AnniversaryGifts #ஆனிவர்ஸரிஅலப்பறைகள் #WeddingAnniversary #யூடியூப்அலப்பறைகள் #வாழ்கநலமுடன்

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

Zenskar

Here' is a Tamil version of this post: At age 42, I am spending at least 9 hours a day (5 days a week) sitting at Work and at (Train) Commute. On a typical day, I spend only 20 minutes of walking to-and-from the train station. No wonder I was feeling tired and letahrgic by the end of each day. By the time, Wednesday arrives, I look forward to the weekend already. A concerned friend invited me to attend Yoga classes and I readily agreed to give it a go. It's been a good 6 week since we started the group Yoga classes. Two classes a week, delivered via Skype/WhatsApp; Master Jagadeesan, our Yoga instructor, currently holds the world record for the longest Yoga marathon (138 hours). He corrects our mistakes over video and ensures we practise each Yoga pose the right way. At Work, I practise each day in one of the meeting rooms and after changing to PJs. Zenskar, a martial art similar to Karate, Kung Fu, Judo, Silambam, Thai-Chi, Hitachi, etc. If I had known Zenskar as a m

ஜென்ஸ்கர்/ஸென்ஸ்கர்/Zenskar

Here's an English version of this post. TLDR; உட்கார்ந்த இடத்திலேயே (sedantry work) வேலை செய்பவர்கள், தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி, நடை/ஓட்டப் பயிற்சி, யோகா என்று எதையாவது ஒன்றை செய்யுங்கள். நல்ல உடல்நலனை ஒரே நாளில் கொண்டு வரமுடியாது. வயசு 42 ஆச்சு. வாரத்திற்கு (5 நாள்) 36 மணிநேர கம்ப்யூட்டர் வேலை + நாளுக்கு 2 மணி நேர ரயில் பயணம். ஆக, தினசரி 9 மணி நேரம் இருக்கையில் அமர்ந்தபடி. ரயில் நிலையத்துக்கு நடந்து போகும் 20 நிமிடங்கள் தவிர. புதன்கிழமை வரும்போதே, எப்படா சனி, ஞாயிறு வருமென்று எதிர்பார்த்தே, மந்தமாக போய்க்கொண்டிருந்த போது, என் நலனின் மீது அக்கறை கொண்ட நண்பர் ஒருவர், ‘வாங்க, யோகா செய்யலாம்' என்று அழைத்தார். ‘ஓக்கே, செய்யலாமே’ என்று செய்ய ஆரம்பித்து ஒன்றரை மாதங்கள் ஆகி விட்டது. வாரத்துக்கு இரண்டு வகுப்புகள்; மாஸ்டர் ஜெகதீசன் , ஸ்கைப் / வாட்ஸப் வழியே எடுக்கிறார். ரொம்பவும் கண்டிப்பான வாத்தியார். 360 டிகிரி சுற்ற வைத்து சரியாக செய்கிறோமோ என்று தவறுகளை திருத்துகிறார். தினமும் ஒரு அரை/முக்கால் மணி நேரம், ஆபிசில் மீட்டிங் ரூம் புக் செய்து, உடை மாற்றி பயிற்சி செய்