Skip to main content

Posts

Showing posts from March, 2020

Zenskar

Here' is a Tamil version of this post: At age 42, I am spending at least 9 hours a day (5 days a week) sitting at Work and at (Train) Commute. On a typical day, I spend only 20 minutes of walking to-and-from the train station. No wonder I was feeling tired and letahrgic by the end of each day. By the time, Wednesday arrives, I look forward to the weekend already. A concerned friend invited me to attend Yoga classes and I readily agreed to give it a go. It's been a good 6 week since we started the group Yoga classes. Two classes a week, delivered via Skype/WhatsApp; Master Jagadeesan, our Yoga instructor, currently holds the world record for the longest Yoga marathon (138 hours). He corrects our mistakes over video and ensures we practise each Yoga pose the right way. At Work, I practise each day in one of the meeting rooms and after changing to PJs. Zenskar, a martial art similar to Karate, Kung Fu, Judo, Silambam, Thai-Chi, Hitachi, etc. If I had known Zenskar as a m

ஜென்ஸ்கர்/ஸென்ஸ்கர்/Zenskar

Here's an English version of this post. TLDR; உட்கார்ந்த இடத்திலேயே (sedantry work) வேலை செய்பவர்கள், தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி, நடை/ஓட்டப் பயிற்சி, யோகா என்று எதையாவது ஒன்றை செய்யுங்கள். நல்ல உடல்நலனை ஒரே நாளில் கொண்டு வரமுடியாது. வயசு 42 ஆச்சு. வாரத்திற்கு (5 நாள்) 36 மணிநேர கம்ப்யூட்டர் வேலை + நாளுக்கு 2 மணி நேர ரயில் பயணம். ஆக, தினசரி 9 மணி நேரம் இருக்கையில் அமர்ந்தபடி. ரயில் நிலையத்துக்கு நடந்து போகும் 20 நிமிடங்கள் தவிர. புதன்கிழமை வரும்போதே, எப்படா சனி, ஞாயிறு வருமென்று எதிர்பார்த்தே, மந்தமாக போய்க்கொண்டிருந்த போது, என் நலனின் மீது அக்கறை கொண்ட நண்பர் ஒருவர், ‘வாங்க, யோகா செய்யலாம்' என்று அழைத்தார். ‘ஓக்கே, செய்யலாமே’ என்று செய்ய ஆரம்பித்து ஒன்றரை மாதங்கள் ஆகி விட்டது. வாரத்துக்கு இரண்டு வகுப்புகள்; மாஸ்டர் ஜெகதீசன் , ஸ்கைப் / வாட்ஸப் வழியே எடுக்கிறார். ரொம்பவும் கண்டிப்பான வாத்தியார். 360 டிகிரி சுற்ற வைத்து சரியாக செய்கிறோமோ என்று தவறுகளை திருத்துகிறார். தினமும் ஒரு அரை/முக்கால் மணி நேரம், ஆபிசில் மீட்டிங் ரூம் புக் செய்து, உடை மாற்றி பயிற்சி செய்

எல்லாம்….நம்ம ரெகமெண்டஷன்ல வந்த பயக...

TLDR; ஆஸ்திரேலிய தமிழர்கள், அந்நியர்களாக வாழ வேண்டியதில்லை. இங்கே நடக்கும் உள்நாட்டு அரசியலை புரிந்துகொள்ளுங்கள். கடமைகளை தவறாமல் செய்யும் நாம், நம் உரிமைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். நம் சமூகத்திற்கு என்ன தேவையென்று அறிந்துகொண்டு, கேட்டுப்பெற்றுத் தர  முன்வரவேண்டும்! ஆஸ்திரேலிய தமிழர்கள் நிறைய பேசும் இரு விஷயங்கள் - தமிழ் சினிமா மற்றும் தமிழ்நாட்டு (இந்திய) அரசியல். நீங்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை (Permanent Residency/Australian Citizenship) பெற்று விட்டிருந்தால், தமிழ்நாட்டு/இந்திய அரசியல் நிகழ்வுகள் உங்களுக்குத் தேவையில்லா ஆணிகள். இங்கே வரி செலுத்த தொடங்கி விட்டால், இங்கே வசிக்கும்வரை, நீங்களும் ஒரு ஆஸ்திரேலியன்தான். உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் கவுன்சிலர் பெயர் தெரியும்? சந்தித்து பேசி இருக்கிறீர்களா? ஒரு பகுதிக்கு புதியதாக விடு மாறிப் போகும்போது, உங்களுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் கடிதங்கள் அனுப்பி இருப்பார்கள் - கவனித்திருக்கிறீர்களா? ஏதாவது உள்ளூர் சிக்கலைத் தீர்க்க, புகார்/மனு கொடுத்து இருக்கிறீர்களா? இந்நாட்டின் கடந்த 300 வருட வரலாற்றைப் படித்தால்

ஆப்பிள் & திராட்சை திருவிழா

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை (ஆஸ்திரேலிய) குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஸ்டான்ந்தார்ப் (Stanthorpe) என்ற சிறிய ஊரில் நடைபெறும் விழா, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்டான்ந்தார்ப் (Stanthorpe), ஆப்பிள்தார்ப் (Applethorpe) சிறுநகரங்கள் , தண்ணீர் தீர்ந்து, வண்டிகள் மூலம் நீர் விநியோகித்தன. இப்போது மழை பெய்து பச்சை பசலேன்று, ஆறு, நீர்வீழ்ச்சிகளில் நீரோடி பார்க்க நன்றாக இருக்கிறது. 2019 டிசம்பர் மாத காட்டுத்தீயால் (bushfire) பாதிக்கப்பட்ட மரங்களெல்லாம் துளிர்த்துள்ளதை பார்த்தது மகிழ்ச்சி.  ஆப்பிள்களை மரங்களில் பார்ப்பது இதுவே முதல் முறை என்பதால், கூடுதல் மகிழ்ச்சி. ஆப்பிள் விளைவிக்க மழை தண்ணீரே போதும், வறட்சியான தட்பவெப்பத்தில்தான் சுவைமிக்க ஆப்பிள்கள் விளையும் என்று பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இயற்கைமுறை விவசாயம் செய்யும் டெனிஸ் ஏஞ்சலினோ (Dennis Angelino, Gran Elly Orchard) சொன்னார்.  ஒயின் பிரியர்கள் (wine lovers) எனில், இங்கு நிறைய திராட்சை தோட்டங்கள் (vineyards), தொழிற்சாலைகளில் (wineries) சுவை பார்க்க, சாம்பிள் கொடுக்கிறார்கள் (ரொம்ப