Skip to main content

Posts

Showing posts from November, 2019

அனஸ்டேஷீய பேலஷே

சென்ற மாதம் க்வீன்ஸ்லாண்ட் மாநில முதல்வர் (Premier) அனஸ்டேஷீய பேலஷே (Annastacia Palaszczuk MP), பிரிஸ்பனில் இருக்கும் இந்திய சமூக அமைப்புகளை விருந்துக்கு (Indian Community Reception) அழைத்திருந்தார். அனைவரையும் அழைத்து, ஒருங்கிணைத்தது குயின்ஸ்லாந்தின் இந்திய சமூகங்களின் கூட்டமைப்புக்கு (Federation of Indian Communities of Queensland (FICQ) |...) நன்றி. ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாய்த் தமிழ்ப் பள்ளியின் (Thaai Tamil School Inc ) சார்பாக முதல்வரையும், பல்லினக் கலாச்சார அமைச்சர் (Multicultural Minister) ஸ்டிர்லிங் ஹின்ச்கிலிஃப் (Stirling Hinchliffe MP)-யும் சந்தித்தோம். முதல்வருக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவரால் ரொம்ப நேரம் இருக்க முடியாது என்று அமைச்சர் சொன்னார். மயில்-கழுத்து வண்ண பட்டுப்புடவையை அழகாய் உடுத்தி வந்திருந்தார் முதல்வர். க்வீன்ஸ்லாண்ட் அரசு பல்லினக் கலாச்சாரத்தை (Multiculturalism) ஒரு முக்கிய பலமாக பார்ப்பதை வலியுறுத்தினார். க்வீன்ஸ்லாண்டில் ஒவ்வொரு இனக்குழுவும் தம் சொந்தக் கலாச்சார அடையாளங்களையும் கொண்டிருக்க, அவரவர் மொழிகளை, வளர்க்கத் தடை ஏத