Skip to main content

Posts

Showing posts from July, 2019

தம்ப்பிஈஈஈஈஈஈஈஈஈஈ... இந்த பொற்கரை எங்கே இருக்குன்னு சொல்றீங்களா.. ?

தங்கக்கரை, பொற்கரை, சூரியக்கரை, விக்றோரியா எல்லாம் ஆஸ்ட்ரேலியாவில்தான் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? Goldcoast  தங்கக்கரை, பொற்கரை என்றும், Sunshine coast சூரியக்கரை என்றும், Victoria  விக்றோரியா என்றும் சில தமிழ்க்குழுக்கள், தமிழார்வலர்கள் தமிழ்ப்படுத்துகிறார்கள். Australia (ஆஸ்ட்ரேலியா)-வை ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா, ஆசுத்திரேலியா என வேற, வேற மாதிரி எழுதுவதும் சரியில்லை.  பிரிட்டிஷார் போல் உதகமண்டலம் என்பதை ஓட்டகமண்ட், ஊட்டி என்று சீரழிக்காமல், ஆஸ்ட்ரேலியர்கள் பெரும்பாலான சிறுநகரங்களுக்கு ஆஸ்ட்ரேலிய பழங்குடியின பெயர்களையே வைத்துள்ளனர் (சில பெரிய நகரங்கள் விதிவிலக்கு). ஒரு அலுவலகத்தில் புதிதாய்ச் சேர்ந்தால், உங்கள் பெயரின் சரியான உச்சரிப்பைச் சொல்லச்சொல்லி, திரும்பத் திரும்ப உச்சரித்து சரியாக சொல்லி, மற்ற பணியாளர்களையும் சரியாக சொல்ல வைப்பார்கள். பெரும்பாலான ஆங்கிலேயர் போல் இந்தியப் பேரை சுருக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.  ஆஸ்ட்ரேலியர்கள் ஊர்களின் பேர்களை ஒரு வகையில் எழுதிவிட்டு, மற்றொரு வகையில் உச்சரிப்பார்கள். முன்னாடி ஓரு பதிவில் சொன

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

TLDR If you know a language other than English and haven’t read or written in that language lately, please start reading and writing. Generations of knowledge do not get passed on when a language is forgotten; especially when we stop writing and reading in that language! Choose Tamil for reading and writing in social media!  திடீரென்று ஏன் முகநூலில், அதுவும் தமிழில் எழுதுகிறேன் என்று நிறைய வாசகர்கள் (?!) கடிதம், தொலைபேசி, வாட்ஸப் மற்றும் நேரில்.... சரி..சரி... யாரும் கேக்கல... நானே சொல்றேன்!  நான் வலைப்பதிவைத் தொடங்கியபோது, என்னுடைய பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, நிறைய பேர் படித்து பயன்பெறட்டும் என்று ஆங்கிலத்தில் எழுதினேன். படிக்கிறார்களோ, இல்லையோ, ஆளில்லாக் கடையில் டீ ஆத்துவது போல, நான் பாட்டுக்கு இங்கே (http://thirumurugan.blogspot.com/) எழுதித் தள்ளினேன்! அப்போது தமிழ் வலைப்பதிவுகளின் (http://www.tamilmanam.net/) தீவிர வாசகனாய் மட்டுமே இருந்தேன். காரணம், 2003-ல் தமிழில் ஒவ்வொரு எழுத்தாய்க் கோர்த்து எழுதி முடிப்பதற்குள் என் கற்பனைக் குதிரை ஓடியாடிக் (??!!) களைத்து

கிம்ப்பி-கிம்ப்பி என்றொரு மரம்

Gympie என்ற ஊரின் பெயரை எப்படி உச்சரிப்பீங்க? ஜிம்பை? கைம்பை? ஜிம்பி? அங்கு வசிக்கும் மக்களைக் கேட்டால் "கிம்ப்பி" என்று சொன்னார்கள். இக்கிராமத்தில் இரண்டு வருடம் வசித்த சாதனை எங்களுக்கு உண்டு. ஏன் சாதனை என்று இன்னொரு நாள் சொல்றேன்.  கிம்ப்பி என்பது அப்பகுதியில் வசித்து வந்த கபி-கபி (Kabi Kabi) இன பழங்குடியினரின் அபாரிஜினல் மொழிச் சொல்லிலிருந்து வந்தது; சாத்தான் போன்ற (devil-like) என்று பொருள். கிம்ப்பி-கிம்ப்பி என்பது தொட்டால் தேள் போன்று கொட்டி எரிச்சலை ஏற்படுத்தும் மரம் (Stinging Tree). இம்மரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. மரீனா ஹர்லி (Marina Hurley) "கிம்ப்பி-கிம்ப்பி இலைகள் ஏற்படுத்துவது நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடிய மிக மோசமான வலி. உங்கள் தோல் சூடான அமிலத்தால் எரிக்கப்படும் அதே நேரத்தில் மின்சாரம் பாய்ச்சுவது போன்றது அந்த வலி" என்கிறார். 1-2 மீட்டர் உயரமுள்ள இம்மரத்தின் இலை/தண்டு/கிளைகளில் இருக்கும் சிறிய, கண்ணுக்குத் தெரியக் கூடிய அடர்த்தியான மயிர்/முட்களே இந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கிம்ப்பி கிம்ப்பி மாதிரி மொத்தம் நான்கு வகை தாவரங்கள