Gympie என்ற ஊரின் பெயரை எப்படி உச்சரிப்பீங்க? ஜிம்பை? கைம்பை? ஜிம்பி? அங்கு வசிக்கும் மக்களைக் கேட்டால் "கிம்ப்பி" என்று சொன்னார்கள். இக்கிராமத்தில் இரண்டு வருடம் வசித்த சாதனை எங்களுக்கு உண்டு. ஏன் சாதனை என்று இன்னொரு நாள் சொல்றேன். கிம்ப்பி என்பது அப்பகுதியில் வசித்து வந்த கபி-கபி (Kabi Kabi) இன பழங்குடியினரின் அபாரிஜினல் மொழிச் சொல்லிலிருந்து வந்தது; சாத்தான் போன்ற (devil-like) என்று பொருள். கிம்ப்பி-கிம்ப்பி என்பது தொட்டால் தேள் போன்று கொட்டி எரிச்சலை ஏற்படுத்தும் மரம் (Stinging Tree). இம்மரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. மரீனா ஹர்லி (Marina Hurley) "கிம்ப்பி-கிம்ப்பி இலைகள் ஏற்படுத்துவது நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடிய மிக மோசமான வலி. உங்கள் தோல் சூடான அமிலத்தால் எரிக்கப்படும் அதே நேரத்தில் மின்சாரம் பாய்ச்சுவது போன்றது அந்த வலி" என்கிறார். 1-2 மீட்டர் உயரமுள்ள இம்மரத்தின் இலை/தண்டு/கிளைகளில் இருக்கும் சிறிய, கண்ணுக்குத் தெரியக் கூடிய அடர்த்தியான மயிர்/முட்களே இந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கிம்ப்பி கிம்ப்பி மாதிரி மொத்தம் நான்கு வகை தாவரங்கள...
Life is such an incredible and happy journey!