Skip to main content

National Close the Gap Day 2022 - இடைவெளி குறைத்து சமத்துவம் படைப்போம்

 

இடைவெளி  குறைத்து சமத்துவம்  படைப்போம் நீங்க முன்தெரியாத ஒருத்தரை பார்த்து பழக நினைச்சா, அவங்க பெயர், ஊர், எப்படி இங்க வந்தாங்க, அவங்களின் விருப்பு/வெறுப்புகள் என்னென்னன்னு கேட்பீங்கதானே? இப்படி தொடர் உரையாடல்கள் வழியேதான், அவங்களைப்  பத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும்.


ஒருவரின் வரலாற்றைப் புரிந்துகொள்ளும்போது, அவங்களுக்கும் நமக்குமான இடைவெளி குறையும். இடைவெளி குறையுநதால், நாம் அவங்களை நமக்கு சரிசமமாக நினைப்போம்/நடத்துவோம். பிறகு, இணைந்து ஒன்றாக பயணிக்கலாம்.


நம்ம ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்த போதிலும், அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பட்டறைகள் மூலம், அவர்களின் வரலாறு, வளர்ப்புமுறை, வாழ்வியல், அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்; இவையெல்லாம் அவர்களின் இன்றைய வாழ்வியலை எவ்வாறு பாதிக்கிறது என்று அவர்கள் நேரடியாக சொல்லக் கேட்டேன்.


தற்போதைய பழங்குடி மக்கள் இன்றும் பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளனர். புகை, மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமைப்பட்டு, உடல்நலன் மற்றும் மனநலன் குன்றி சமூகத்தின் விளிம்பு நிலையிலே வாழ்ந்து மடிகிறார்கள். ‘அவங்க அப்படித்தான் பாஸ்’-ன்னு கடந்து போகாமல், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் வரலாற்றோடு, அவர்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 


ஆஸ்திரேலிய பழங்குடியினர் எதிலெல்லாம் பின்தங்கியுள்ளார்கள், அவர்கள் சமத்துவம் அடைய இன்னும் என்னென்ன தேவை என்பதை நினைவுபடுத்த மார்ச் 17, 2022 National Closing the Gap Day கடைபிடிக்கப்படுகிறது. 


எடுத்துக்காட்டாக,  ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் டாரஸ்  ஸ்ட்ரெய்ட்ஸ் தீவு மக்களின் சராசரி  ஆயுட்காலம், பழங்குடியினர் அல்லாத ஆஸ்திரேலியர்களை விட 10-11 ஆண்டுகள் குறைவு.


அரசு செய்வது இருக்கட்டும். நாம என்ன செய்யலாம்?


கேப்டன் குக் (Captain Cook) வந்தபின் நடந்த வரலாற்றை (White history of Australia) மட்டுமே பள்ளிகளில் படிக்கும் நம் குழந்தைகளுக்கு, அதற்கு முன்னான  ஆஸ்திரேலியாவின் முழு வரலாற்றையும் (Black and White history of Australia) கற்பிப்போம்.


சமூக நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களில், ஆஸ்திரேலிய நிலத்தின் உண்மையான  பாதுகாவலர்களை நாம் புரிந்து உளமார அங்கீகரிப்பதை (Welcome to Country) உறுதிசெய்வோம். முடிந்தால் அவர்களையும் அழைத்து பேச வைப்போம்.


சமூக ஊடகங்களில், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களைப்பற்றி அவர்களின் வரலாறு,  சமூக கலாச்சாரம் மற்றும் அவர்களின் இன்றைய வாழ்வியல்  சிக்கல்கள் பற்றி தெரிந்துகொண்டு உண்மையான கருத்துக்களை பகிர்வோம்.


பழங்குடியின மக்களுக்கு உரிய மரியாதையும், சமவாய்ப்புகளையும்  தரும் வலுவான சமூகத்தை உருவாக்குவதற்கு  அரசிடம் விண்ணப்பிக்கலாம். https://antar.org.au/closethegappledge


பெரும்பாலான துறைகளில் பின்தங்கியிருக்கும் பழங்குடியினருக்கும், மற்ற சமூகத்திற்கும் உள்ள #இடைவெளி இல்லாமல் செய்தால்தான் ஆஸ்திரேலியா ஒரு முன்னேறிய நாடு என்று சொல்ல முடியும்.


-திரு

#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை

மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்மேலும் வாசிக்க:

https://www.closingthegap.gov.au/


https://www.pc.gov.au/closing-the-gap-data/dashboard


https://antar.org.au/campaigns/national-close-gap-day


#இடைவெளியைக்குறைப்போம் #ஆஸ்திரேலியசமத்துவம் #அனைவருக்குமானஆஸ்திரேலியா #closethegap #closethegapday #nationalclosethegapday2022 #equalityforallaustralians #indigeneouslivesmatter #firstnationpeople #aboriginalaustralians 


Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ