ஆஸ்திரேலிய நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில், சமைத்த/சாப்பிட்ட பாத்திரங்களை கழுவும் இயந்திரமான டிஷ்வாஷர்(Dishwasher) இருக்கும். ஆனா, நம்ம ஆளுங்க யாரும் அதை உபயோகப்படுத்த மாட்டாங்க. ‘என்ன ரெண்டு, மூணு பாத்திரம்தான, அப்பப்ப கழுவிக்குவேன்’ என்று சிலரும், ‘டிஷ்வாஷர் சரியா பாத்திரத்தை சுத்தம் செய்ய மாட்டேங்குது’ என்று இன்னும் சிலரும், ‘தோ இருக்காரு பாருங்க, இவர்தான் எங்க வீட்டு டிஷ்வாஷர்’ என்று பலரும் புருஷனை கைகாட்டுவார்கள்.
நாங்க வாடகைக்கு இருந்த வீட்டில் டிஷ்வாஷர் ஒரு தடவை யூஸ் பண்ண ஆரம்பிச்சு, நேரத்தையும், தண்ணீரையும் மிச்சப் படுத்துவது பிடிச்சு போய், யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். அப்புறம், ‘டிஷ்வாஷர் இல்லா வீட்டில் குடியேற வேண்டாம்!’ என்றும் தீர்மானித்தோம்.
இரவு நேரத்தில் எல்லா பாத்திரங்களையும் அடுக்கி வைத்து, டிஷ்வாஷிங் மாத்திரை (dishwashing tablet) ஒன்றை போட்டு, ஆன் செய்தால், ஒண்ணரை மணி நேரத்துல சுத்தம் பண்ணி, காலங்காத்தால நமக்கு எல்லா பாத்திரமும் பளிச்சென்று இருக்கும். நல்ல டிஷ்வாஷிங் மாத்திரை இருந்தால் (CostCo-வில் கிடைக்கும் Cascade Complete Dishwashing Tablets மாதிரி), அடிப்பிடிச்ச பாத்திரத்தை கூட அப்படியே லோட் பண்ணலாம். ஒரு தடவ அலசி போடணுமுன்னு கூட தேவையில்ல.
இப்ப வாடகைக்கு வந்த வீட்டிலும், ஓனர்களிடம் அடம்பிடித்து, சின்னதா TableTop Dishwasher ஒன்றை பொருத்திவிட்டோம்.
மகிழ்ச்சியா வாழ்க்கை போயிட்டுருக்கும்போது, திடீர்னு ஒருநாள் டிஷ்வாஷர் பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்யாமல் முரண்டு பிடித்தது. சரி, வாங்கிய கம்பெனியிடம் புகார் அளிக்க, Operating Manual, Warranty தரவுகளைத் தேடி எடுத்தேன். ஆனா, புகாரளிச்சு கம்பெனி ஆள் வந்து பாக்க குறைந்தது ரெண்டு வாரங்களாகலாகிற நிலைமை.
சரி, ஏதாவது Easy Fix இருக்குமா என்று இணையத்தை கூகிளினேன் (இவரு பெரிய ரைட்டர் சுஜாதான்னு நினப்பு!!). டிஷ்வாஷர் சரியாக வேலை செய்ய வில்லையெனில் அதற்கு 54 காரணங்கள் இருக்கலாம் (ஸ்விட்ச் போட்டீங்களா, எலெக்ட்ரிஸிட்டி இருந்தாச்சா, தண்ணி கனெக்சன் கொடுத்தீங்களா) என்று விளக்கமாக YouTube-ல் நிறைய பேர் வீடியோ போட்டிருந்தாங்க.
அப்பதான் ஒரு வீடியோல, டிஷ்வாஷர் டேப்லெட் இல்லாம இன்னொரு பொருளும், அப்பப்ப தேவைப்படும்னு சொன்னாங்க. அது என்னென்னா “Rinse Aid”னு ஒரு திரவம். அதை வாங்கி அதை சரியாப் பொருத்தினதும், மறுபடியும் பாத்திரங்கள் எல்லாம் பள, பள பளான்னு சுத்தமாக ஆனது. இந்த Rinse Aid ஒரு மூணு அல்லது ஆறு மாசத்துக்கு ஒருமுறை, பார்த்து போட வேண்டிருக்கும்.
இந்த டிஷ்வாஷரை சரி செய்யும் வீடியோல, இருக்கும் பெரும் ஆதரவுகளை பெற்றுள்ள பின்னூட்டம் “இந்த வீடியோவுக்கு பல திருமணங்களை காப்பாற்றும் சக்தி உள்ளது!”. உண்மைதான்!
https://www.youtube.com/watch?v=Izv9UN3B5ig
-திரு
https://facebook.com/writerthiru
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
Comments