Skip to main content

Posts

ஆஸ்திரேலிய தினம்

TL;DR (சுருக்கம்) - தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்டால், முன்பின் தெரியாதவராய் இருந்தாலும் ஓடோடி வந்து உதவி செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். தேவைப்பட்டால் தயக்கமின்றி உதவி கேளுங்கள்; உதவி கேட்பவர்களுக்கு நீங்களும் உதவி வழங்குங்கள். இதுதான் Mateship (நட்புணர்வு) எனப்படும் ஆஸ்திரேலிய பண்பாடு. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆஸ்திரேலிய தினம். வெயில் தாழும் மாலை நேரத்தில் கிளம்பி, குழந்தைகள், குடும்பமாக 8 பேர், இரண்டு வாகனங்களில் (ஒரு யூட் - Ute மற்றும் ஒரு ஆல் வீல் டிரைவ் - All Wheel Drive), அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று வரலாமென்று கிளம்பினோம். சாலையிலிருந்து இறங்கி கடற்கரை மணலில், ஒரு சுற்று போய் விட்டு வீட்டுக்குப் போவதென்று திட்டம். சில நூறு மீட்டர் கடற்கரை மணலுக்குள் ஓடியபின், எங்களுக்கு முன்னால் சென்ற Ute வண்டி முன்செல்லாமல், நிலையாய் நின்று, அதன் சக்கரங்கள் மட்டும் வேகமாய்ச் சுழல ஆரம்பித்தன. மென்மையான கடற்கரை மணலில் சரியான பிடிப்பு இல்லாமல், சக்கரங்கள் வேகமாய் பள்ளம் தோண்ட, சில நொடிகளில் அந்த Ute வண்டி மணலில் மாட்டிக்கொண்டது. பின் சென்ற எங்கள் காரின் சக்கரங்களும...

வெளிய இங்கிலீஷ், உள்ள பஞ்சாபி !

சனிக்கிழமைகளில் நடக்கும் சந்தையில் (Farmers Market), ஒரு பஞ்சாபி அம்மணியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம் (இங்கிலீஷில்தான்!). துணைவிதான் பேசிக்கொண்டிருந்தார். நான் சும்மா கேட்டுக்கொண்டிருந்தேன்! அவர்களின் பொண்ணு, பையனுக்கு முறையே 5 மற்றும் 8 வயசிருக்கும். பேச்சு வாக்கில், ‘எப்படி, உங்க குழந்தைங்க இவ்ளோ நல்லா பஞ்சாபி மொழி பேசறாங்க’ன்னு கேட்டோம். “ரெண்டு பெரும் இங்கேயேதான் பிறந்தாங்க. காப்பகம் (Day Care), ஆரம்பப்பள்ளி (Prep) போகுமுன் அவங்களுக்குத் தெரிஞ்ச ஒரே மொழி பஞ்சாபி, ஆனா, காப்பகம் போக ஆரம்பித்த கொஞ்ச நாளில் இங்கிலீஷில் மட்டுமே பேசத் தொடங்கிவிட்டனர்”, என்றார். ‘என்னடா, இது வம்பா போச்சு’ என்று 'எனக்கு இங்கிலிஷ்லாம் வராது.. பஞ்சாபி மட்டும்தான் தெரியும்.. என் கூட பேசணும்னா, வீட்டில எல்லாருமே பஞ்சாபி மொழி மட்டும் தான் பேசவேண்டும்' என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்! ஆரம்பத்தில், ‘வெளியில மட்டும் மத்தவங்ககிட்ட இங்கிலிஷ்ல பேசறீங்க, ஏன் வீட்ல மட்டும் பஞ்சாபி பேசச்சொல்லி, எங்களைக் கஷ்டப்படுப்படுத்தறீங்க’ன்னு முரண்டு பிடிக்க.. 'அம்மாவுக்கு வீட்டுக்கு வந்தா, இங்கிலிஷ் மறந்து ...

அனஸ்டேஷீய பேலஷே

சென்ற மாதம் க்வீன்ஸ்லாண்ட் மாநில முதல்வர் (Premier) அனஸ்டேஷீய பேலஷே (Annastacia Palaszczuk MP), பிரிஸ்பனில் இருக்கும் இந்திய சமூக அமைப்புகளை விருந்துக்கு (Indian Community Reception) அழைத்திருந்தார். அனைவரையும் அழைத்து, ஒருங்கிணைத்தது குயின்ஸ்லாந்தின் இந்திய சமூகங்களின் கூட்டமைப்புக்கு (Federation of Indian Communities of Queensland (FICQ) |...) நன்றி. ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாய்த் தமிழ்ப் பள்ளியின் (Thaai Tamil School Inc ) சார்பாக முதல்வரையும், பல்லினக் கலாச்சார அமைச்சர் (Multicultural Minister) ஸ்டிர்லிங் ஹின்ச்கிலிஃப் (Stirling Hinchliffe MP)-யும் சந்தித்தோம். முதல்வருக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவரால் ரொம்ப நேரம் இருக்க முடியாது என்று அமைச்சர் சொன்னார். மயில்-கழுத்து வண்ண பட்டுப்புடவையை அழகாய் உடுத்தி வந்திருந்தார் முதல்வர். க்வீன்ஸ்லாண்ட் அரசு பல்லினக் கலாச்சாரத்தை (Multiculturalism) ஒரு முக்கிய பலமாக பார்ப்பதை வலியுறுத்தினார். க்வீன்ஸ்லாண்டில் ஒவ்வொரு இனக்குழுவும் தம் சொந்தக் கலாச்சார அடையாளங்களையும் கொண்டிருக்க, அவரவர் மொழிகளை, வளர்க்கத் தடை ஏத...

கிளிக்கு முளைத்த றெக்க - 2

6-ஆம் வகுப்பு வரும்போதே, கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளரிடம் சொல்லிவிட்டேன், 'நான் ட்ரைவிங் டெஸ்ட் புக் செய்துள்ளேன்' என்று. 'ஆனால், நீ இன்னும் ரெடி ஆகவில்லை. உன்னால் பாஸ் பண்ண முடியாது. இன்னும் ஒரு கூடுதலாக 10 வகுப்பு ஆகலாம்' என்றார். 'நான் ட்ரை பண்றேன். பாஸ் பண்ணிட்டா நான் தனியாவே கார் ஓட்டக் கற்றுக்கொள்வேன்' என்றேன். ‘என்னது..? பாஸ் பண்ணிட்டு, கத்துக்கப் போறீயா?' என்று அதிர்ச்சி அடைந்தார் அப்பெண்.  அப்போது முப்பது டாலர்தான் ஓட்டுநர் தேர்வுக்கு கட்டணம். ஐம்பதுக்கு (x 10), முப்பது பரவாயில்லை, அதனால், ரிஸ்க் எடுப்பது சரி என்றே பட்டது! ஓட்டுநர் தேர்வில், இரண்டு வகை தவறுகளால் நீங்கள் தோல்வியடைய வாய்ப்பு உண்டு. தனக்கோ, மற்றவர்க்கோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தால் அது பெரிய தவறு - உடனடி ஃபெயில். உங்களை மேற்கொண்டு கார் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்த நண்பன், இந்தியாவில் நீண்ட நாளாக சொந்த கார் ஓட்டிக் கொண்டிருந்தவன், இப்படி ஒரு டிரைவிங் டெஸ்டில் தவறு செய்ய, காரை (இங்கேயும் சொந்த கார் தான்) பக்கத்தில் நிறுத்திவிட்டு, டாக்ஸி பிடித்து வந்த கதை உண்டு....

*கிளிக்கு முளைத்த றெக்க - 1

 tldr; கார் ஓட்டத் தெரியாம, ஆஸ்ட்ரேலிய சிட்டிகளில் வேணா காலம் தள்ளலாம். ரீஜியனல் ஏரியாவில் நாள்கூட தள்ளமுடியாது. so, learn to drive as soon as you come to Australia, if not before.  முதல் வேலை கொடுக்கும்போது கார் ஓட்ட லைஸன்ஸ் கண்டிப்பாய்த் தேவை என்று சொல்லிவிட்டார்கள். பேப்பர் செய்யத் தேவையான மரங்களை விளைவிக்கும் வனவியல் (Forestry) நிறுவனம் என்பதால் இந்த கூடுதல் விதிமுறை. என்னுடைய வேலை என்னமோ அலுவலகத்தின்தான்; ஆனால், ஆறு மாதத்தில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம். அடிலைடில் (Adelaide) இருந்த வரை பஸ், ட்ரெய்ன் மற்றும் நண்பர்களின் கார்கள் என்று சொகுசாய் பயணித்துவிட்டு மேற்கு விக்டோரியாவில் (South-western Victoria) இருக்கும் ஹேமில்ட்டன் (Hamilton) சென்று சேர்ந்தபோது, டாக்ஸி மட்டுமே போக்குவரத்துக்கு வழி என்ற நிலைமை. காடு மாடு தெரியாமல் ஓடியாடி, புல், பூ, கங்காரு என்று படம் பிடிக்கும் கலைஞனைக் (!), கூண்டில் அடைத்த காலத்தின் கோலத்தை எப்படிச் சொல்வேன்!  ஆஸ்ட்ரேலியர்கள் அவர்களின் வாழ்நாளில் 75%-ஐ காரில் கழிப்பார்கள் (Car is a moving home!) என்பது என் கணிப்பு. ...

தாய்த் தமிழ்ப் பள்ளியின் 8-ஆம் ஆண்டு கலை விழா

Thaai Tamil School - Dance Practice தமிழ்ச் சூழலில் வளர்ந்த நாம், ஆங்கிலம் கற்றுக்கொள்ள பட்ட கஷ்டமெல்லாம் கொஞ்சமே! அங்கேயாவது ஆங்கிலம், பள்ளியில் ஒரு பாடமாக நமக்கு இருந்தது. ஆஸ்ட்ரேலியாவில் தமிழ் மொழி கற்பது என்பது 'கங்காரு வாலில் சடை பின்னுவது' மாதிரி (ச்சும்மா சொல்லி வைப்போம்...கங்காரு வந்து சண்டை போடப்போகுதா, என்ன?!). ரொம்ப, ரொம்பக் கஷ்டம். தன்னார்வலர்களால் நடத்தப்படுத்தும் பகுதி நேர தமிழ்ப் பள்ளிகள் (தாய்த்தமிழ்ப்பள்ளி, பிரிஸ்பன் தமிழ்ப் பள்ளி) இருப்பதால், எங்கள் குழந்தைகள் தமிழ்க் கற்க உதவியாய் இருக்கிறது.  ஆங்கிலச் சூழலில் வாழும் இவர்களுக்கு, வீட்டுக்கு வெளியே தமிழ் பேச/கற்க வாய்ப்புகள் வெகு சொற்பம். நாங்கள் பேசுவதைக் கேட்பது, எங்களிடம்/தமிழ் நண்பர்களிடம் பேசுவது மூலம் கற்றுக்கொள்கிறான், விஷ்ணு. பெரும்பாலான தமிழ்ப் படங்களின் வன்முறை, சிறுகுழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதால் நாங்கள் விஷ்ணுவுக்கு தமிழ்ப் படங்களைக் காண்பிப்பதில்லை. காரில் (நல்ல) தமிழ்ப் பாடல்கள் கேட்பது உண்டு; காதில் கேட்கும் வார்த்தைகளைக் கற்றுக்கொள்வான்.  முதலில் எங்களின் விருப்பத்தாலும், வற்...

Aussie Kids vs Tamil Kids

Aussie Kids vs Tamil Kids Aussie Kids vs Tamil Kids  -திரு #தமிழ்   #தமிழ்ப்பதிவு   #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன்   #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை மற்ற பதிவுகள் https://www.facebook.com/ hashtag/ஆஸிதமிழன்