Skip to main content

கிளிக்கு முளைத்த றெக்க - 2

6-ஆம் வகுப்பு வரும்போதே, கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளரிடம் சொல்லிவிட்டேன், 'நான் ட்ரைவிங் டெஸ்ட் புக் செய்துள்ளேன்' என்று. 'ஆனால், நீ இன்னும் ரெடி ஆகவில்லை. உன்னால் பாஸ் பண்ண முடியாது. இன்னும் ஒரு கூடுதலாக 10 வகுப்பு ஆகலாம்' என்றார். 'நான் ட்ரை பண்றேன். பாஸ் பண்ணிட்டா நான் தனியாவே கார் ஓட்டக் கற்றுக்கொள்வேன்' என்றேன். ‘என்னது..? பாஸ் பண்ணிட்டு, கத்துக்கப் போறீயா?' என்று அதிர்ச்சி அடைந்தார் அப்பெண்.

 அப்போது முப்பது டாலர்தான் ஓட்டுநர் தேர்வுக்கு கட்டணம். ஐம்பதுக்கு (x 10), முப்பது பரவாயில்லை, அதனால், ரிஸ்க் எடுப்பது சரி என்றே பட்டது! ஓட்டுநர் தேர்வில், இரண்டு வகை தவறுகளால் நீங்கள் தோல்வியடைய வாய்ப்பு உண்டு. தனக்கோ, மற்றவர்க்கோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தால் அது பெரிய தவறு - உடனடி ஃபெயில். உங்களை மேற்கொண்டு கார் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்த நண்பன், இந்தியாவில் நீண்ட நாளாக சொந்த கார் ஓட்டிக் கொண்டிருந்தவன், இப்படி ஒரு டிரைவிங் டெஸ்டில் தவறு செய்ய, காரை (இங்கேயும் சொந்த கார் தான்) பக்கத்தில் நிறுத்திவிட்டு, டாக்ஸி பிடித்து வந்த கதை உண்டு.

‘பாதிப்பு இல்லை இன்னும் கொஞ்சம் பயிற்சி இருந்தா நல்லா ஓட்டலாம்’ அது சிறிய தவறு. எட்டு சிறிய தவறுகளை அனுமதிப்பார்கள் (உ.தா: 50 km வேகப் பகுதியில் 35-ல் மெதுவாகப் போவது, அடிக்கடி, தேவையில்லாமல் பிரேக் போடுவது). நான் எட்டுக்கு ஏழு தவறு செய்து விளிம்பில் தேர்வானேன். டிரைவிங் லைஸன்ஸ்தானே கேட்டிங்க, இந்தாங்கோ என்று ஆபீஸில் கொடுத்தாயிற்று.

பிறகு, இன்னும் மூன்று மாதம் பயிற்சி நண்பர்களுடன். ஒரு 2000 டாலர் போட்டு, கார் ஓட்டிப் பழக ஒரு பழைய 1999 Mitsubishi Magna v6 காரை வாங்கினேன். விடுமுறை நாட்களில் ஆளில்லா கார் பார்க், ட்ராபிக் இல்லாத ரோடு என்று ஓட்டி பழகினேன். தனியாக ஓட்டும்போதே, என்னால் கூடுதல் கவனத்துடன் (பார்த்துச் சரி செய்ய யாருமில்லையே!) பாதுகாப்பாகவும், வேகமாகவும் கற்றுக்கொள்ள முடிந்தது.

 லைஸன்ஸ் மற்றும் கார் இருந்த முதல் நாள் இவ்ளோ பெரிய்ய ஆஸ்ட்ரேலியாவே ரொம்பச் சின்னதாய் தோன்றியது. உண்மையாகவே றெக்க (இறகுகள்) முளைத்தன. அது உணரவேண்டிய விஷயம்! போக்குவரத்து வசதிகள் இல்லா ஊரில் ஒரு வருடம் வாழ்ந்தபின், அடுத்தவரைச் சார்ந்தே இருந்த என்னுடைய பயணங்கள் சட்டென விரிவடைந்தன.

 மெல்பனா.. நாலு மணி நேரம், அடிலெய்டா..ஐந்தரை மணி நேரம்தான்..பெர்த் போக வேண்டுமா..வெறும் முப்பத்துமூன்று மணி நேரம்தான் என்று பின்னிப் பெடலெடுத்து ஊர் சுற்றினேன். ஆபீஸ் 5-மணிக்கு முடிந்தவுடன், தோன்றிய திசைகளில் காரை ஓட்டிச் செல்வேன், எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி படங்கள் எடுப்பேன். அற்புதமான நாட்கள், அவை! அப்ப, இப்ப அழகான நாட்களா இல்லயான்னு கேக்கக்கூடாது. குடும்பமும், என்னைப் போலவே பயணங்களை விரும்புவதால், அவ்வப்போது நீண்ட பயணங்கள் செய்கிறோம். படங்கள் எடுப்பதற்காகவே அழகான இடங்களைத் தேடிப்போய் பார்ப்போம்.

 இதுவரை நான் செய்ததில் சிறந்த சாலைப் பயணங்கள் கீழே. பெரும்பாலான இப்பயணங்கள் நண்பர்களோடு செய்ததுதான். லைஸன்ஸ் வாங்கும்முன், சும்மா உக்காந்தே சுற்றியது.

1. அடிலைட் - ஒல்லங்காங் - ஸிட்னி - (Adelaide - Wollongong - Sydney)

2. ஹாமில்டன் - போர்ட் ஃபேரி - கிரேட் ஓஷியன் ரோட்ஃ - டிவெல் அபோஸல்ஸ் - அப்பல்லோ பே (Hamilton - Port Fairy - Great Ocean Road - Twelve Apostles - Apollo Bay)

3. பிரிஸ்பன் - காஃப்ஸ் ஹார்பர் - போர்ட் மெகொயிரி - ஸிட்னி (Brisbane - Coffs Harbour - Port Macquarie - Sydney)

4. பிரிஸ்பன் - க்ளாஸ் ஹவுஸ் மௌன்டைன்ஸ் - மேப்பில்டன் - மெலனி - மாண்ட்வில் - நேம்பூர் (Brisbane - Glass House Mountains - Mapleton - Maleny - Montville - Nambour)

5. ஹார்வி பே - பண்டாபர்க் - டௌன் ஆஃப் செவென்டீன் செவென்ட்டி (Town of 1770) - கிளாட்ஸ்டன் (Hervey Bay - Bundaberg - Town of 1770 - Gladstone)

6. கிம்ப்பி - - டின் கேன் பே - ரெயின்போ பீச் - நூஸா - ஸன்ஷைன் கோஸ்ட் (Gympie - Tin Can Bay - Rainbow Beach - Noosa - Sunshine Coast)

7. பெர்த் -ஜெரால்ட்டன் - கல்பாரி - ஷார்க் பே - மங்க்கீ மையா (Perth - Geraldton - Kalbarri - Shark Bay - Monkey Mia)

8. பெர்த் - மார்கரெட் ரிவர் - பஸ்ஸல்ட்டன் - அல்பெனி (Perth - Margaret River - Busselton - Albany)

9. பெர்த் - ஊபின் -பெரெஞ்சோறி - மொறவா - முளைவா (Perth - Wubin - Perenjori - Morawa - Mullewa)

10. மெல்பன் - பேலரட் - ஹாமில்ட்டன் - க்ராம்பியன்ஸ் - ஹால்ஸ் கேப் (Melbourne - Ballarat - Hamilton - Grampians - Halls Gap)









 இன்னும் ஆஸ்ட்ரேலியாவில் பார்க்கவேண்டியவை 90% மீதம் இருக்கு. பார்த்ததில் அடியேனே பிடித்த 100 படங்கள் சின்னச் சின்னதாய் இங்கே. பெரியதாய் பார்க்க வேண்டுமெனில் Awesome Australia photo album பிலிக்கர் லிங்க்  https://www.flickr.com/photos/thiru/albums/72157666442221084

கூட பயணித்து அவஸ்தைப்பட்டவர்களுக்கு நன்றிகள்

இதனால் கூற வந்த கருத்து - கார் ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள்; பயணப்பட்டு கிராமப்புற (regional) ஆஸ்ட்ரேலியாவை சுற்றிப் பாருங்கள். -திரு

 #தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை

மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன் 

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ