சனிக்கிழமைகளில் நடக்கும் சந்தையில் (Farmers Market), ஒரு பஞ்சாபி அம்மணியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம் (இங்கிலீஷில்தான்!). துணைவிதான் பேசிக்கொண்டிருந்தார். நான் சும்மா கேட்டுக்கொண்டிருந்தேன்!
அவர்களின் பொண்ணு, பையனுக்கு முறையே 5 மற்றும் 8 வயசிருக்கும். பேச்சு வாக்கில், ‘எப்படி, உங்க குழந்தைங்க இவ்ளோ நல்லா பஞ்சாபி மொழி பேசறாங்க’ன்னு கேட்டோம். “ரெண்டு பெரும் இங்கேயேதான் பிறந்தாங்க. காப்பகம் (Day Care), ஆரம்பப்பள்ளி (Prep) போகுமுன் அவங்களுக்குத் தெரிஞ்ச ஒரே மொழி பஞ்சாபி, ஆனா, காப்பகம் போக ஆரம்பித்த கொஞ்ச நாளில் இங்கிலீஷில் மட்டுமே பேசத் தொடங்கிவிட்டனர்”, என்றார்.
‘என்னடா, இது வம்பா போச்சு’ என்று 'எனக்கு இங்கிலிஷ்லாம் வராது.. பஞ்சாபி மட்டும்தான் தெரியும்.. என் கூட பேசணும்னா, வீட்டில எல்லாருமே பஞ்சாபி மொழி மட்டும் தான் பேசவேண்டும்' என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்! ஆரம்பத்தில், ‘வெளியில மட்டும் மத்தவங்ககிட்ட இங்கிலிஷ்ல பேசறீங்க, ஏன் வீட்ல மட்டும் பஞ்சாபி பேசச்சொல்லி, எங்களைக் கஷ்டப்படுப்படுத்தறீங்க’ன்னு முரண்டு பிடிக்க.. 'அம்மாவுக்கு வீட்டுக்கு வந்தா, இங்கிலிஷ் மறந்து போவுது கண்ணுங்களா' என்று சொல்லி சமாளித்து, “வீட்டுக்குள்ளே பஞ்சாபி மட்டும்” என்கிற விதியை செயல்படுத்துவதாகச் சொன்னார்.
‘இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, நான் சொல்றது பொய்னு தெரிஞ்சுடும். ஆனா, அதுக்குள்ளே பஞ்சாபிய மறக்க முடியாத அளவுக்குப் பேச பழகிடுவாங்க; அதுக்கப்புறம் மறக்கறது கஷ்டம்!’ என்றபடி நகர்ந்தார்! தமிழ் பேசாச்சூழலில் வளரும் உங்க குழந்தைங்களை தமிழ் மொழியை பேசவைக்க, நீங்க என்ன செய்யறீங்க/செய்யப்போறீங்க?
-திரு
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #ஆஸிதமிழன்

Comments