Skip to main content

Art of Gardening - எங்க வீட்டுத் தோட்டம்

 TLDR; Gardening is a hobby that offers a holistic, therapeutic, joyful and rewarding experience. If you would like to experience magic, plant a seed, nurture it and see the first flower/fruit get produced. 


சுருக்கம்: தோட்டக்கலை என்பது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான அனுபவத்தை வழங்கும் ஒரு பொழுதுபோக்கு. நீங்கள் ஒரு அதிசயத்தைக் காண விரும்பினால், ஒரு விதை யை நட்டு, பராமரித்து, அது செடியாக வளர்ந்து  மலர் / பழம் / விளைபொருளாய் உருவாவதைக் காணுங்கள்.




ஆஸ்திரேலியா வந்த புதுசுல இங்கே உள்ள வீட்டுத் தோட்டங்களையெல்லாம் பார்ப்பேன். அழகான பூக்களோ, பறிச்சு சாப்பிட ஒரு பழம், காயோ இல்லாம இருக்கிற செடி, கொடிகளைக் காட்டி,  'பாத்தீங்களா, எங்க தோட்டம் எவ்வளவு அழகா இருக்கு'ன்னு சொல்லுவாங்க, உள்ளூர் ஆஸ்திரேலியர்கள். 'ஏம்மா, இதெல்லாம் ஒரு தோட்டமமா'ன்னு  சிரிப்பு வரும். இந்த செடி கொடிகளுக்கா மாங்கு, மாங்கென்று வார இறுதி நாட்களில் உழைக்கிறார்கள் என்று தோணும்.


கொஞ்ச மாதங்களுக்கு முன்னால  ஒரு மரப்பண்ணைக்கு (plant nursery) போயிருந்தோம். அங்குதான், இங்கே வளர்கிற, இந்த மண்ணுக்கே உரிய  உள்நாட்டு செடிகொடிகள்,  எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்குதுன்னு காமிச்சாங்க. எந்த செடிகளை வச்சா, தேனீ, பட்டாம்பூச்சி, புழுக்கள், மற்றும் பறவைகள் உங்க வீட்டுத் தோட்டத்துக்கு வரும்னெல்லாம்  விளக்கமா சொன்னாங்க. ரொம்ப பிரமிப்பா இருந்தது.


உதாரணத்துக்கு, எங்க வீட்டுத் தோட்டத்தில ஒரு தென்னமரம் மாதிரியான ஒரு Palm Tree இருக்கு; அது எப்ப பார்த்தாலும் பாளை விட்டு, கீழே உதிர்த்து கொண்டே இருக்கும். இதனால என்ன உபயோகம் (நமக்கு!) என்று யோசிச்சிருக்கேன். ஆனா, அம்மரம்  பூக்கள் பூக்கும் சமயத்தில் மட்டும் ரெயின்போ லோரகீட்ஸ் (Rainbow Lorikeets - பஞ்சவர்ண கிளிகள்) பறவைகள்,  பூக்களில் தேன் குடிக்க வரும். பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். அட, இந்த மரத்துக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாருங்களேன்.


நமக்குத் தேவையான காய்கறி செடிகள் நட்டாலும், இந்த தேனீக்கள்/பறவைகள் உதவி இல்லாமல் காய் காய்க்காதுன்னு, சின்ன வயசுல அறிவியல் புத்தகத்தில் படிச்சது நினைவுக்கு வந்துச்சு. 


தோட்டத்தில் சில ஸுக்கினி (Zucchini) செடிகள் வைச்சோம். அந்த செடியில், ஆண் மலர்,  பெண் மலர்ன்னு தனித்தனியா மலரும். மகரந்தச் சேர்க்கை நடந்தாதான், அந்தப் பெண் மலர், காய் பிடித்து ஸுக்கினி காய்க்கும். இல்லன்னா அப்படியே பட்டுப் போய்டும். மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் வந்து உதவி பண்ணலண்ணா, நீங்களே அந்த பூக்கள் இரண்டையும் சேர்த்து மகரந்தச் சேர்க்கை செய்யணும். ஒரு செடி, இரண்டு செடினா பரவாயில்ல. ஒரு பெரிய தோட்டம் முழுக்க காய்க்க வைக்க இப்படி செய்யணும்னா, எவ்வளவு கஷ்டமான வேலை இல்ல? 


என்ன செய்யணும்னா, உங்க தோட்டத்தில லாவண்டெர் (Lavender) செடி வைச்சா போதும், தேனீக்கள் வரும், ஸுக்கினி காய்க்கவும் உதவி செய்யும். அழகான, நறுமணம் வீசும் லாவண்டெர் பூக்களும் கூடுதல் மகிழ்ச்சி தரும். 


நாங்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் தக்காளி, புதினா, கத்தரி, வெண்டைக்காய், பாகற்காய், கீரைகள் என்று நிறைய செடிகளை தோட்டத்தில்  பராமரித்து வந்தாங்க அதுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு குடி வந்த ஆஸ்திரேலிய குடும்பம்  எந்த செடியும் வைக்கல.


நாங்க குடி வந்த உடனே தேவி தோட்டவேலை ஆரம்பிச்சார் (வீட்டு உரிமையாளர் அனுமதியுடன்தான்!). சென்ற வருட கோடை காலத்தில் செடிகள் சரியாக முளைக்காமல் போக, தோட்டவேலை கொஞ்சம் சுணக்கமாய் இருந்தது. பொங்கலுக்கு அப்புறம் வந்த மழையால்,  அப்புறம் ஊர்ல இருந்து மாமனார், நிறைய தோண்டி, கொத்தி, களைகளை எடுத்து, பதப்படுத்தி, தினமும் தண்ணீர் விட்டுக்கொண்டு இருந்ததால இப்ப தோட்டம் ரொம்ப சிறப்பா, செழிப்பா இருக்கு. 


இப்ப தோட்டத்தில் தக்காளி, கத்தரி, மஞ்சள், வெங்காயம், பாகற்காய், துவரை, லெட்டஸ் (lettuce), உருளை, காளி பிளவர் (cauliflower), சக்கரவள்ளி கிழங்கு, கேள் (kale) கீரை, புதினா, பெஸில் (basil);   பூக்கள் - சங்குப்பூ, வாடா மல்லி, சாமந்தி, சூரியகாந்தி இதெல்லாம் நல்லா மகிழ்ச்சியா காய்த்து/பூத்துக் கொண்டு இருக்கின்றன. 


கொரோனா காலத்தில், நம்ம வீட்டுத் தோட்டத்துக் காய்களைப் பறித்து சாப்பிடுவது நல்லா இருந்தது. உயிர்கொல்லி போடாம வளர்த்தது இன்னும் மகிழ்ச்சி. காய்கறிகள் சமைக்கும்போது தண்ணீர் விடாமல் சுவையாகவும் இருந்தன. 


இந்த வீட்டில் மட்டுமல்ல, இதை விட சின்ன தோட்டங்கள் உள்ள வாடகை வீடுகளிலும் இருந்திருக்கோம். அப்பவும் தேவி, சின்னச்சின்ன தொட்டிகளில் வளர்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார். 


பின்குறிப்பு: ஆமா, உங்க வீட்ல இருக்கவங்க  இவ்ளோ பண்றாங்களே, நீ என்ன பண்றேன்னுதானே கேக்கறீங்க? விளைஞ்சத நல்லா சாப்பிட்டுவிட்டு, போட்டோ, வீடியோ எடுத்து உங்களுக்குக் காட்டறனே, அது போதாதா?


-திரு.


#தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #அறிவியல் #தோட்டம் #தோட்டக்கலை


Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ