Here's an English version of this post.
TLDR; உட்கார்ந்த இடத்திலேயே (sedantry work) வேலை செய்பவர்கள், தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி, நடை/ஓட்டப் பயிற்சி, யோகா என்று எதையாவது ஒன்றை செய்யுங்கள். நல்ல உடல்நலனை ஒரே நாளில் கொண்டு வரமுடியாது.
வயசு 42 ஆச்சு. வாரத்திற்கு (5 நாள்) 36 மணிநேர கம்ப்யூட்டர் வேலை + நாளுக்கு 2 மணி நேர ரயில் பயணம். ஆக, தினசரி 9 மணி நேரம் இருக்கையில் அமர்ந்தபடி. ரயில் நிலையத்துக்கு நடந்து போகும் 20 நிமிடங்கள் தவிர. புதன்கிழமை வரும்போதே, எப்படா சனி, ஞாயிறு வருமென்று எதிர்பார்த்தே, மந்தமாக போய்க்கொண்டிருந்த போது, என் நலனின் மீது அக்கறை கொண்ட நண்பர் ஒருவர், ‘வாங்க, யோகா செய்யலாம்' என்று அழைத்தார். ‘ஓக்கே, செய்யலாமே’ என்று செய்ய ஆரம்பித்து ஒன்றரை மாதங்கள் ஆகி விட்டது.
வாரத்துக்கு இரண்டு வகுப்புகள்; மாஸ்டர் ஜெகதீசன், ஸ்கைப் / வாட்ஸப் வழியே எடுக்கிறார். ரொம்பவும் கண்டிப்பான வாத்தியார். 360 டிகிரி சுற்ற வைத்து சரியாக செய்கிறோமோ என்று தவறுகளை திருத்துகிறார். தினமும் ஒரு அரை/முக்கால் மணி நேரம், ஆபிசில் மீட்டிங் ரூம் புக் செய்து, உடை மாற்றி பயிற்சி செய்கிறேன். கராத்தே, குங் ஃபூ, வர்மம், ஜூடோ, சிலம்பம், தாய்-சி, ஹிட்டாச்சி போன்றவைகளை உள்ளடக்கிய ஜென்ஸ்கர் (Zenskar martial arts ஸென்ஸ்கர்), சித்தர்கள் உருவாக்கிய ஒரு தற்காப்புக் கலை என்று பின்பு தான் தெரியும். தெரிந்திருந்தால், ஒரு வேளை, ‘இந்த வயசுல நான், யார்கிட்ட, எதுக்கு போய் சண்டை போட போறேன்’னு ஒதுங்கியிருப்பேனோ என்னவோ!
எனக்கு புரிந்தவரை (கொஞ்சமே கொஞ்சம்தான்!) ஜென்ஸ்கர் என்பது ஒரு விழிப்புணர்வு (mindfulness/being in the present) நிலைக்கு நம் உடலையும், மனதையும் தயார்படுத்தும் கலை என்பேன். கடந்த மூன்று வாரங்களாக, கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் அவரவர் வீட்டிலேயே இருப்பதால், மாஸ்டர் வாட்ஸப்பில் (Group Video Call) வகுப்பு எடுப்பது மிகவும் வசதியாக இருக்கிறது.
‘இந்த ஒன்றரை மாதத்தில் செஞ்சதெல்லாம், ஜென்ஸ்கர்-க்கு உங்களை தயார்படுத்த செய்கிற ஆரம்ப பயிற்சிகள் தான்!’ என்ற மாஸ்டர், ‘இதுவரை உடலில், மனதில் என்ன மாற்றங்களை கண்டீர்கள்?’ என்று கேட்டார்.
‘உடல் இலகுவாகவும், மனசு கொஞ்சம் அமைதியாகவும் இருக்கிறது. தொப்பையை வைத்துகொண்டு, இதெல்லாம் நம்மால் செய்யவே முடியாது என்று நினைத்த சில(!) யோகாசனங்களை, செய்ய முடிகிறது என்றேன். மூன்று கிலோ எடை குறைந்துள்ளது. யோக பயிற்சிகள் மற்றும் தியான பயிற்சிகளே நல்ல பலன்களை கொடுத்து வருகின்றன. இவைகளை தொடர்ந்து பண்ணினாவே போதும் போல இருக்கிறது; மேலும் எதற்கு தற்காப்பு கலை!’ என்று சொன்னேன். ‘இதுவரை, ஜென்ஸ்கரின் ஆரம்ப துளியைதான் பாத்திருக்கீங்க, ஒரு கடலே இருக்கிறது, உங்களை ஆச்சரியப்படுத்த!’ என்றார் மாஸ்டர். பார்க்கலாமே!
-திரு
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்

Comments