Skip to main content

ஹேமில்ட்டன் குளிரும், க்வீன்ஸ்லாண்ட் வெயிலும்

அடிலைடில் படித்து முடித்த பிறகு முதல் வேலை, மேற்கு விக்டோரியாவில் இருக்கும் ஹாமில்ட்டன் (Hamilton - https://en.wikipedia.org/wiki/Hamilton,_Victoria) என்ற ஒரு ஊரில் கிடைத்தது. தென்மேற்கு விக்டோரியாவின் அழகான பிராந்திய நகரம் (regional town). விக்டோரியா மாநில தலைநகர் மெல்பர்னிலிருந்து முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் (மூன்றரை நேர கார் பயணம்), பத்தாயிரம் மனிதர்கள் மற்றும் முப்பதாயிரம் ஆடு, மாடுகள் வசிக்கும் ‘பெரிய’ ஊர். கிரேட் ஓஷன் ரோடு (Great Ocean Road), கிராம்ப்பியன்ஸ் (Grampians) என்ற அழகிய மலைத்தொடர், மவுண்ட் காம்பியர் (Mount Gambier) போன்ற அழகிய சுற்றுலாத் தலங்கள் சுற்றிலும் உள்ள பகுதி. விழுந்தடித்துக் கொண்டு உதவி செய்யும் அருமையான ஆஸி மனிதர்கள்! ஒரே தொல்லை, குளிர்தான்!

வருட சராசரி உயர் வெப்பநிலை 20 டிகிரி இருக்கும். அப்போது கார் ஓட்டத் தெரியாது என்பதாலும் (இன்னொரு நாள் அந்தக் கதையச் சொல்றேன்!), பஸ்/ட்ரெயின் எல்லாம் இல்லாத ஊர் என்பதாலும் முதலில் ஒரு புஷ் பைக் (Push bike - சாதா மிதிவண்டி!) வாங்கிக்கொண்டேன். அதில் 10 நிமிடப் பயணம் அலுவலகம், கடை மற்ற எல்லாவற்றுக்கும். குளிர்காலத்தில் மேலுக்கு ரெண்டு கோட், மங்கி குல்லா, காலுறை, கையுறை என்று வழி தவறி ஆஸ்ட்ரேலியா வந்த எஸ்கிமோ ரேஞ்சுக்கு ஆபீஸுக்குச் சென்று இறங்கும்போது, காலை 8 மணிக்கு ஸீரோ டிகிரியைக் காட்டும். பனியெல்லாம் பெய்யாது; ஃபராஸ்ட் (Frost) மட்டும் ஐஸாய் படிந்து இருக்கும். புயல், மழை என்றால், 'கூடவேலை பார்க்கும் நண்பர்கள்' கூட்டிச்செல்வார்கள்.

 தேவி முதலில் க்வீன்ஸ்லாண்ட் வந்த உடன் 'இதுதான் ஆஸ்ட்ரேலியாவா? வெயில், மழை, செடி கொடியெல்லாம் நம்ம ஊர் மாதிரிதானே இருக்கு' என, ‘வா, வேற ஆஸ்ட்ரேலியா பாக்கலாம்’னு கூட்டிட்டுப் போனது மெல்பன், பேலரட் (Ballarat), ஹாமில்ட்டன் மற்றும் கிரேட் ஓஷன் ரோடு. அதுவும் இலையுதிர் காலத்தில்தான் (April) சென்றோம். எங்கு பார்த்தாலும் ‘போஸ்ட் கார்டு ஸ்டைல்’ கண்கவர் காட்சிகள், தண்ணீர் உள்ள நீர்வீழ்ச்சிகள் என மிக அழகாய் இருந்தது. ஆனால், அந்தக் குளிரையேத் (நிறைய காற்று அடிக்கும்!) தாங்காமல் தப்பித்தோம், பிழைத்தோம் என்று 'Sunshine Paradise'க்கு வந்து சேர்ந்தோம்.

 குளிர்காலத்தின் உச்சம் (Peak Winter) ஆன போன மாதம் 'ச்சும்மா மெல்பன் வாங்களேன்' என, பத்து மில்லியன் டாலர் காசு கொடுத்தாலும், பனிக்காலத்தில் பார்டரைத் தாண்ட மாட்டோம்ல எனச்சொல்லிவிட்டேன்!!

 நிறைய நல்ல நண்பர்கள் விக்டோரியாவிலும், மெல்பனிலும் இருக்கிறார்கள்; Meme-ஐ பார்த்து கோபப்பட வேண்டாம் (அதான் விக்டோரியா, அமலாபால் மாதிரி அழகா இருக்கும்னு சொல்லிட்டோம்ல!), வேணும்னா தமிழ்-ல எதையாவது சொல்லி திட்டிவிடுங்கள். ‘க்வீன்ஸ்லாண்ட் ஹாலிடே’ ஒன்றை பார்ஸலில் அனுப்பிவைக்கிறேன் :-)

Queensland (Brisbane) vs Victoria (Melbourne) 


 Queensland (Brisbane) vs Victoria (Melbourne)

 காலைல எந்திரிச்சு - நீலவானம், நல்ல சூரிய ஒளி - பாத்து 'What a beauuuutifuuuul daaaay'-னு வருஷத்துல 300 நாள், என்னால சொல்ல முடியும், உன்னால முடியுமா? 

இங்க Winter சீஸன்ல கூட கடலுக்குப் போய் கால் நனைப்பேன், கால் நடுங்காம நீ Spring சீஸன்ல செய்வியா?

 ஒரு டிரஸ் போட்டுட்டுப் போய் Brisbane-ல நாள் முழுவதும் சுத்த முடியும், ஒரு நாளைக்கு நாலு சீஸன் மாறுற Melbourne-ல முடியுமா?

 துவைச்ச துணியை காலை 5 மணிக்கு உலர்த்தி, காஞ்ச பின்னாடி 6 மணிக்கு அதேயே போட்டுட்டு ஆபீஸ்ல 8 மணிக்கு இருப்பேன், Clothes Dryer இல்லாம நீ செய்வியா?

 Room Heater இல்லாம வருடம் முழுக்க நான் இருப்பேன், உன்னாலா இருக்க முடியுமா?

 வாழை, தென்னை, முருங்கையெல்லாம் வீட்டுக்குப் பின்னாடி வளப்பேன், அங்க முடியுமா?

 -திரு

 #ஆஸிதமிழன் #தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #BrisbaneVsMelbourne #QueenslandVsVictoria

 இந்த மாதிரி எழுதிய மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்

 Queensland - Beautiful one day, Perfect the next - https://youtu.be/TMEdbG7G2tM

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ